முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பை: ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோயிலில் சிறப்பு பூஜை

இந்த சிறப்பு பூஜையில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் சேர்மபாண்டி,

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:20 AM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை அருள்மிகு கிருஷ்ணன் கோயிலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் சேர்மபாண்டி, இணைச் செயலர் ஆர்.எம். வெங்கட்ராமன், மாவட்ட ஜெயலிதா பேரவைத் தலைவர் ஏ.கே. சீனிவாசன், கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம். சக்திவேல்முருகன், நகர்மன்றத் தலைவி வே. செல்வி, துணைத் தலைவர் ரா. மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து இளைஞர் பாசறை சார்பில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →