தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மதுபோதையில் தகராறு செய்த 6 பேர் கைது

விருதுநகர் பஜார் பகுதியில் காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, காய்கறி அங்காடி பகுதியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்து

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மதுபோதையில் தகராறு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 6 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் பஜார் பகுதியில் காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, காய்கறி அங்காடி பகுதியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதோடு, அந்த வழியாக வந்த போக்குவரத்துகளுக்கும் இடையூறும் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் தகராறில் ஈடுபட்ட விருதுநகர் அருகே வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(22), மீசலூரைச் சேர்ந்த கண்ணன்(21), குல்லூர்சந்தையைச் சேர்ந்த ஞானகுரு(23), இளையராஜா(24), விஜயகுமார்(23) மற்றும் எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார்(22) ஆகிய 6 பேர் மீதும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக  பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT