தற்போதைய செய்திகள்

ரயிலில் கழிவறையில் தவறவிட்ட பர்சை மீட்டு பயணிடம் ஒப்படைத்த போலீஸார்

விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறையில் தவறவிட்ட மணிபர்சை மீட்டு மீண்டும் பயணிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறையில் தவறவிட்ட மணிபர்சை மீட்டு மீண்டும் பயணிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.

இந்நிலையில் ராஜபாளையத்திலிருந்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் ஏறி சனிக்கிழமை பயணம் மேற்கொண்டாராம்.

அப்போது, திருத்தங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கழிப்பறைக்கு சென்றாராம். அப்போது, கையில் வைத்திருந்த மணி பர்சை   கழிப்பறைக்குள் தவறி விட்டாராம். அதை எடுப்பதற்கு முயற்சி செய்கையில் தண்டவாள தரைப்பகுதியில் விழுந்துள்ளது.

இதையடுத்து என்ஜின் கோளாரால் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று பர்சை தவற விட்டது குறித்தும், அதில் சிகிச்சைக்காக ரூ.15 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டாராம். உடனே ரயில்வே சார்பு ஆய்வாளர் தேடி பார்க்கும் படி காவலர் தெய்வத்திடம் கூறினாராம்.

அதையடுத்து, தவற பர்சை தேடி காரிசேரிக்கும்-திருத்தங்கல்லுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேடினாராம். அப்போது, அந்த பர்சு திருத்தங்கல் ஆலவூரணி தண்டவாளப் பகுதியில் கிடந்துள்ளது. உடனே அதை மீட்டு ரயில் பயணி முனியம்மாளிடம் ஒப்படைத்தனர். பின்னர் தாமதமாக புறப்பட்டுச் சென்ற அதே ரயிலில் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT