தற்போதைய செய்திகள்

ராணுவ வீரரின் மனைவியை கேலி செய்த 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(40). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா மகளுடன் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில்,

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவியை கேலி கிண்டல் செய்து மிரட்டியதாக 3 பேர் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(40). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா மகளுடன் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கோவில்பட்டியிலிருந்து இவரது வீட்டிற்கு கடந்த வாரம் பொன்முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேர் வந்து உன் கணவர் உள்ளாரா எனக் கேட்டார்களாம். அதையடுத்து, கேலி கிண்டல் செய்ததோடு மிரட்டவும் செய்தார்களாம்.

இது தொடர்பாக ராணுவ வீரர் பழனிச்சாமிக்கு மனைவி தகவல் தெரிவித்தாராம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழனிச்சாமி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தாராம். அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் பொன்முத்துப்பாண்டியன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT