முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலி வழியாக கடலூர்-கோயம்புத்தூருக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், ஈரோடு வழியாக கடலூர்-கோயம்புத்தூருக்கு புதிய தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என நெய்வேலி ரயில்நிலையத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ராவிடம் சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தலைமையில் சுமார் 50 பேர் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:22 AM
பகிர்:

நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், ஈரோடு வழியாக கடலூர்-கோயம்புத்தூருக்கு புதிய தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என நெய்வேலி ரயில்நிலையத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ராவிடம் சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தலைமையில் சுமார் 50 பேர் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.

மனுவிபரம்: கடலூர்-கோயம்புத்தூர் தடத்தில் ரயில் இயக்கினால் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பயனடைவார்கள். கடலூர், நெய்வேலி பகுதி மக்கள் ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் கொடுத்து கோயம்புத்தூர் செல்லும் நிலை உள்ளது. மேலும் விருத்தாசலம்- சேலம் பாசஞ்சர் ரயிலை கடலூர் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோன்று கடலூர் - சென்னை எழும்பூருக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.

புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, சேலம் பகுதிகளில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்காக கடலூரிலிருந்து நெய்வேலி, விருத்தாசலம், சேலம், ஈரோடு வழியாக எர்ணாகுளத்திற்கும், கடலூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக புதிய ரயில்களை இயக்க வேண்டும். மேலும் சபரிமலை சீசன் போது ஐயப்பமார்களுக்கு வசதியாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மனுவில் எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.