தற்போதைய செய்திகள்

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த 27 பேர் மீட்பு

நாமக்கல் பகுதிகளில்  கோழிப்பண்ணை ஏராளமாக உள்ளன. இங்குள்ள சில கோழிப்பண்ணைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் பகுதிகளில்  கோழிப்பண்ணைகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள சில கோழிப்பண்ணைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து  ஆட்சியர் தட்சணாமூர்த்தி  உத்தரவின் பேரில், ஆர்டிஓ காளிமுத்து தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்தினர். மூன்று கோழிப்பண்ணைகளில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 27 பேர் (கொத்தடிமைகளாக  உள்ளதாக கருதப்படுபவர்கள்) மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது விசாரணையின் போது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT