முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது. ஒரே நாளில் பாபநாசம் அணையின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:23 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது. ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பிற பகுதியிலும் பலத்த மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 43, பாபநாசம் கீழ் அணை 21, சேர்வலாறு அணை 24, மணிமுத்தாறு அணை 6.2, கடனாநதி அணை 12, ராமநதி அணை 6, கருப்பாநதி அணை 4, குண்டாறு அணை 18. அடவிநயினார் அணை 10,
நம்பியாறு அணை 42, கொடுமுடியாறு அணை 35, பேச்சிப்பாறை அணை 3, பெருஞ்சாணி அணை 8.4.
திருநெல்வேலி அதிகபட்சம் 200, நான்குனேரி 70, ராதாபுரம் 41, ஆய்க்குடி 50.5, பாளையங்கோட்டை 32.4, அம்பாசமுத்திரம் 6, சேரன்மகாதேவி 6.8, தென்காசி 22.4, செங்கோட்டை 14, சிவகிரி 4.9, வீரகேரளம்புதூர் 6, ஆலங்குளம் 26.4 மி.மீ மழையும் பெய்துள்ளது.

அருவிகளில் வெள்ளம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாணதீர்த்த அருவிகளில வெள்ளம் ஏற்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வழக்கத்தை விட அதிகமாக நீர்வரத்து இருந்தது.

சனி்ககிழமை காலை மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து குறைந்த எண்ணிக்கையில் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2820 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 666 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து 300 கனஅடியும், கடனாநதி அணையில் 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 25 கனஅடியும், குண்டாறு அணையில் 24 கனஅடியும், அடவிநயினார் அணையில் 50 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 116.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 130.00 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம்  1 அடி உயர்ந்து 75.40 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 81.50 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.

இதேபோல் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 106.00 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 22.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 15.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 35.00 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →