தற்போதைய செய்திகள்

விருதுநகர் கேவிஎஸ் பள்ளிகளின் சார்பில் மராத்தான் ஓட்டப்போட்டி

கே.வி.எஸ்.பள்ளிகளின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளிகளின் சார்பாக மராத்தான் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

கே.வி.எஸ்.பள்ளிகளின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளிகளின் சார்பாக மராத்தான் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் மதன்மோகன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி பங்கேற்று மராத்தான் ஓட்டப்போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டி கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக 9.5 கி.மீ தூரம் வரையில் சென்று கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களும், தற்போது படித்து வரும் மாணவர்களும் என மொத்தம் 1200 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் எம்.கற்பகமூர்த்தி 28.4 நிமிடத்தில் வந்து முதலிடமும், கே.ஜெயக்குமார் இரண்டாம் இடமும், எம்.பிரவீன்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல், தற்போது பள்ளியில் படித்து வரும் பவளச்செல்வம் முதலிடமும், கே.வினோத்குமார் இரண்டாம் இடமும், என்.மணிகண்டன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் நிறைவாக நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கேவிஎஸ் பள்ளிகளின் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT