முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் தொடர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகள்:

விருதுநகர் மாவட்ட அளவிலான மகளிர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்க அரசாணை வெளியிட்டு 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மகளிர் நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனை உடனே அமைக்க வேண்டும்.

5 மாதங்களாக காலியாக உள்ள விரைவு நீதித்துறை நடுவர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்ட மறுநாளில் இருந்து, சுமார் 3 மாதங்களாக இந்த நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. உடனே இப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விருதுநகருக்கு மாற்றப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இதனை உடனே முன்புபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →