தற்போதைய செய்திகள்

ஆரணி அருகே சுமார் 50 லட்சம் மதிப்பிலான 8 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆரணி-வந்தவாசி சாலையில் கல்லேரிப்பட்டு கூட்ரோடில் மகாலட்சுமி நகர் பகுதியில் இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த பாலன் மனைவி உமா என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி

பி.ஜெயச்சந்திரன்

ஆரணி அருகே கல்லேரிப்பட்டு கூட்ரோடில் புதன்கிழமை நள்ளிரவில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான 8 டன் செம்மரம் கடத்த இருந்ததை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஆரணி-வந்தவாசி சாலையில் கல்லேரிப்பட்டு கூட்ரோடில் மகாலட்சுமி நகர் பகுதியில் இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த பாலன் மனைவி உமா என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகில் ஒரு கூரை வீடும் உள்ளது. இதில் ஆந்திரா பகுதியிலிருந்து மினிலாரியில் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து அடுக்கியுள்ளனர். இதுபோல் அடிக்கடி மினிலாரியில் செம்மரங்களை இறக்கியுள்ளனர். வீடு முழுவதும் செம்மரக்கட்டைகளை இறக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் புதன்கிழமை நள்ளிரவில் பெரிய லாரியில் அனைத்து செம்மரக்கட்டைகளையும் ஏற்றியுள்ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட வன பாதுகாவலர் கல்யாணசுந்தரத்திற்கு தகவல் கிடைத்ததின்பேரில் மாவட்ட வன அலுவலர் தன்னப்பன், ஆரணி வனச்சரகர் சக்திகணேஷ், வனவர்கள் முருகன், நடராஜன், தாண்டவமூர்த்தி,லோகு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் இரும்புலிகிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராமன்(24) என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அங்கு இருந்த மினிலாரியும், பெரிய லாரியும் பறிமுதல் செய்தனர்.

மேலும் வனச்சரகர் விசாரணை செய்ததில் இப்பகுதியில் அடிக்கடி மினிலாரி வந்துபோகுமாம். மேலும் புதிய வீடு கட்டும் பணிக்காக பொருட்கள் இறக்குகிறார்கள் என அப்பகுதியிலுள்ளவர்கள் இதனை கவனிக்காமல் இருந்துள்ளனர். என்று தெரிவித்தனர். தப்பி ஓடிய பாலன், உமா ஆகியோரை தேடி வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT