முகப்பு
தற்போதைய செய்திகள்

பிச்சாவரத்திற்கு வந்தபோது விபத்தில் சிக்கிய காதல்ஜோடி : காதலன் சாவு

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த வினோத் (23). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு பயிலும் 17

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:26 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பிச்சாவரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த காதல் ஜோடி விபத்தில் சிக்கியது. இதில் காதலன் இறந்தார். காதலி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த வினோத் (23). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திற்கு புதுச்சேரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது பரங்கிப்பேட்டை பி.முட்லூர் மெயின்ரோட்டில் எதிரே வந்த கடலூர் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீடப்பட்ட வினோத் மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே வினோத் இறந்தார். காதலியான மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.