ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்
தற்போதைய செய்திகள்ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நேதாஜி சாலையில் கௌதம் ஏஜென்சி நடத்தி வருபவர் சுரேஷ் (46). இவரை திருச்சி, ஸ்ரீரங்கம், சுதர்ஸன் நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் அணுகி, வங்கிக் கடன் ரூ.50 லட்சம் பெற்றுத் தருவதாக் கூறியுள்ளனர்.இதற்காக திருச்சி டவுன், மார்க்கெட் இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள சங்கரலிங்கம் மற்றும் ஜோதி ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு 15.11.11 முதல் 19.4.12-ம் தேதி வரையுள்ள காலத்தில் ரூ.4,95,067-யை சுரேஷ் செலுத்தியுள்ளார்.
மேலும் ஒரு தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதற்காக ரூ.1.55 லட்சம் சுரேஷ், தம்பதியினருக்கு கொடுத்துள்ளார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரில் வந்து ரூ.1.50 லட்சம் சங்கரலிங்கம் பெற்றுள்ளார்.சங்கரலிங்கம், தான் கூறியபடி வங்கிக் கடன் பெற்று தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மொபைல் போனில் தொடர்பு கொண்டால் சரியான பதிலளிக்காமல் ஏமாற்றி வருவதுடன், போலீஸில் புகார் கொடுத்தால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் சுரேஷ் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸார் ஸ்ரீரங்கம், சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.