திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு: 31 பேர் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தொடர் திருட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடைய 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி எஸ்ஆர்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தொடர் திருட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடைய 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி எஸ்ஆர்.செந்தில்குமார் வெளியிட்ட செய்தியில்,
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 202 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ளன. இதில் 168 வழக்குகளில், திருட்டு போன ரூ.93 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேபோல் தொடர் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களில் நாமக்கல் உட்கோட்டத்தில் 7 பேர், ராசிபுரத்தில் 5 பேர், திருச்செங்கோட்டில் 12 பேர், பரமத்திவேலூரில் 7 பேர் என மொத்தம் இதுவரை 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 189 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 3 ஆயிரத்து 405 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 574 வழக்குகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக உயரத்திற்கு ஏற்றி சென்றது என பல்வேறு வகையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 48 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர பணம் வைத்து சூதாடியது, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை, அனுமதியின்றி புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்தல் போன்ற வகையில் 3,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்து வழக்குகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 385 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 358 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.