முகப்பு
தற்போதைய செய்திகள்

6 நிமிடங்களில் முடிவடைந்த நெல்லை மாநகராட்சிக் கூட்டம்!

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் ஆரம்பித்து 6 நிமிடங்களில் இன்று முடிவடைந்தது. தங்கள்பகுதி கோரிக்கைகளைப் பேச முடியாததால் மாமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் ஆரம்பித்து 6 நிமிடங்களில் இன்று முடிவடைந்தது. தங்கள்பகுதி கோரிக்கைகளைப் பேச முடியாததால் மாமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து மேயரை முற்றுகையிட முயன்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், அதன் தலைவர் இ.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கவும், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கவும் சரியான நேரத்தில் முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்பு மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு முன்பாக கூட்டப் பொருள்களை வாசிக்கக் கூறிய மேயர் இ.புவனேஸ்வரி, முதல் இரு தீர்மானங்களை நிறைவேறுவதாகவும், மூன்றாவது தீர்மானம் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதாகவும், 4 முதல் 39 ஆவது தீர்மானம் வரையிலான பணிகளுக்கு மறுஏலம் விட தீர்மானம் நிறைவேறுவதாகவும், புதிய பொருள்களாக கொடுக்கப்பட்டுள்ள 1 முதல் 8 தீர்மானங்கள் நிறைவேறுவதாகவும் கூறியதும் கூட்டம் நிறைவேறுவதாகக் கூறி தனக்கான பிரத்யேக வழி வழியாக வெளியேறினார்.இதனால் மாநகராட்சிக் கூட்டம் தொடங்கி மொத்தம் 6 நிமிடங்களில் நிறைவடைந்தது.

இதற்கிடையே மீனவர்கள் மீட்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பொன்.அழகுராஜா வெளிநடப்பு செய்தார். மக்களின் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் மேஜை அருகே சென்று முற்றுகையிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →