பறவைக் காய்ச்சல் எதிரொலி: நெல்லை சந்தைகளில் கோழிகள் விற்கத் தடை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அதன் அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலும் அந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து
பறவைக் காய்ச்சலின் எதிரொலியாக திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சந்தைகளில் கோழிகள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொ) கோ.பொ.ஜெய்சேவியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அதன் அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலும் அந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பறவைக் காய்ச்சல் நோயைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கோழிச்சந்தைகளில் கோழிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த நாள்களில் கோழிச்சந்தைகளில் கோழிகளை வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது. பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.