முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதியின் மூலம் வென்று காங்கிரஸ், திமுகவுக்கு  ஜெயலலிதா சரியான பாடம் கற்பிப்பார்: புதுவை மாநில செயலர் பெ.புருஷோத்தமன்

நீதியின் மூலம் வழக்கில் வெற்றிபெற்று ஜெயலலிதா காங்கிரஸ், திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார் என்றார் புதுவை மாநில அதிமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான பெ.புருஷோத்தமன்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

நீதியின் மூலம் வழக்கில் வெற்றிபெற்று ஜெயலலிதா காங்கிரஸ், திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார் என்றார் புதுவை மாநில அதிமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான பெ.புருஷோத்தமன்.

காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது : பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறை தண்டனையின் மூலம் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சிறையில் உள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் அவரது விடுதலை வேண்டி ஜனநாயக ரீதியில் இயக்கங்களை நடத்திவருகின்றன.

புதுவை மாநில மக்களும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் மனம் வெதும்பியுள்ளனர். அவருக்கு புதுவை மக்கள்  பக்க பலமாக இருப்பார்கள்.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்பது காங்கிரஸ், திமுகவின் சூழ்ச்சியினால் கிடைத்தது. பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டு, தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தில், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உரிய காவிரித் தண்ணீரை திமுக தலைவர்  மு.கருணாநிதியால் ஆட்சியில் இருந்தபோதும், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் பெற்றுத்தரமுடியவில்லை. ஜெயலலிதா மட்டுமே வரலாற்று சாதனை செய்து காவிரித் தண்ணீரை பெற்றுத்தந்தார். இதன் விளைவாக செய்த கர்நாடக காங்கிரஸ், திமுகவின் சூழ்ச்சியால், ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளார்.

நாட்டின் எந்த மாநிலத்தின் முதல்வர்களும் செய்ய முடியாத, மக்கள் வரவேற்கும் சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா.  சட்டப்பேரவைத்  தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் காங்கிரஸூக்கும், திமுகவுக்கும் ஜெயலலிதா மரண அடி கொடுத்தார். மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கட்சிகள், ஜெயலலிதாவை, அதிமுகவை முடக்கிவிடலாமென நினைத்து காய் நகர்த்துகிறது. இதில் அவர்கள் வெற்றிபெறமுடியாது. மேல் முறையீடுகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என உள்ளபோது, இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு வெளிவருவார். அப்போது காங்கிரஸூக்கும், திமுகவிற்கும் சரியான பாடம் புகட்டுவார்.

வருகிற 7-ம் தேதி ஜாமீன் கிடைக்குமென நம்புகிறோம். அப்போதும் மறுக்கப்படும் நிலை வந்தால், ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வு அதீதமாக வெளி்ப்படுவதை யாரும் தடுக்கமுடியாது. இது நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் எச்சரிக்கை அல்ல. மக்களின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போகுமென்து தி்ண்ணம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →