சிதம்பரத்தில் போலி மருத்துவர் கைது
சிதம்பரம் நகரில் எம்பிபிஎஸ் படிக்காமல், ஆங்கில மருத்துவம் செய்வதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டக் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சனிக்கிழமை
சிதம்பரத்தில் ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்ட போலி மருத்துவரை நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் நகரில் எம்பிபிஎஸ் படிக்காமல், ஆங்கில மருத்துவம் செய்வதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டக் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு சிதம்பரம் நகரில் காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் உள்ள கிளினிக் ஒன்றை திடீர் சோதனையிட்டனர். அப்போது அங்கு விபீஷணபுரத்தைச் சேர்ந்த திருஞானம் (56) என்பவர் எஸ்எஸ்எல்சி வரை படித்துவிட்டு, ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்டது தெரியவந்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.