தற்போதைய செய்திகள்

விருதுநகரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும், உடனே விடுதலைச் செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை

எஸ். பாண்டியன்

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும், உடனே விடுதலைச் செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு  மாவட்ட தலைவர் கன்னியப்பன் தலைமை வகித்தார். இதில், சொத்து குவிப்பு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.மேலும், இப்போராட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இப்போராட்டம் மாலை 5 மணிக்கு முடிந்தது.

மனிதச்சங்கிலி போராட்டம்: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில்  ஞாயிற்றுக்கிழமை காலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில்,  விருதுநகர் தேசபந்து மைதானத்திலிருந்து, பஜார் மற்றும் தெப்பம் வரையில் விருதுநகர் ஒன்றியத் தலைவர் கி.கலாநிதி தலைமையில், நகரச் செயலாளர் நயினார் முகமது முன்னிலையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும 250 பெண்கள் உள்பட 700 பேர்  கலந்து கொண்டனர். பின்னர் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT