என்.எல்.சி., ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டம் துவங்குவோம்: அன்புமணி ராமதாஸ்
பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணிச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், இன்னும் ஒரு சில நாட்களில் என்.எல்.சி., ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

35 நாட்களாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். விரைவில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும். பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம், குறைந்தது ரூ. 25 ஆயிரம் சம்பளம் எனக் கேட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் என்.எல்.சி.நிர்வாகத்தில் முறைகேடு நடக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அமல்படுத்தவில்லை. குறைந்தது 2 வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் 25 ஆண்டுகளாக இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்தும், குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.