விராலிமலை அருகே பெண் மரணம்: இளைஞருக்கு ஆயுள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகாமணியின் மனைவி லதா(30). இவர்களுக்கு 2 பெண்கள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருவையாறு அருகே
விராலிமலை அருகே மர்மான முறையில் பெண் மரணமடைந்த வழக்கில் தொடர்புடைய இளைஞருக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனைவிதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகாமணியின் மனைவி லதா(30). இவர்களுக்கு 2 பெண்கள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருவையாறு அருகே திருச்சென்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாரதி (28) என்பவர் வெல்டராக விராலிமலையில் பணியாற்றி வந்தார்.. இந்நிலையில், லதாவுக்கும் வெல்டர்பாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த கணவர் மகாமணி 3 குழந்தைகளுடன் மனைவியைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பாரதியும் லதாவும் பொருவாய் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் லதா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இறந்தபோன லதாவின் தாய் செல்லம்மாள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் புகார்அளித்தார். இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் லதா மரணத்தில் பாரதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததது. இதைத்தொடர்ந்து பாரதி மீது விராலிமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிச்சம்மாள் கொலை குற்றத்திற்காக பாரதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.