தற்போதைய செய்திகள்

மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்க ஏபிவிபியினருக்கு அனுமதி மறுப்பு: தென்காசியில் மாணவர்கள் கைது

தமிழகம் முழுவதும் மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பா.​ பிரகாஷ்

தமிழகம் முழுவதும் மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் தென்காசி வேன் நிறுத்தம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் அந்த மாணவர்கள், மற்றும் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதே இடத்தில் கடந்த 10 நாட்களாக அதிமுக.,வினர் ஜெயலலிதா கைதை எதிர்த்து, கொட்டகை அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT