முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் மதுரை ஒத்தகடையைச் சேர்ந்த நால்வர் சாவு

மதுரை அருகேயுள்ள ஒத்தகடையை சோந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான காரில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேர் திருச்செந்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர். காரை முருகானந்தம் ஓட்டிச்சென்றார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

மதுரை அருகேயுள்ள ஒத்தகடையை சோந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான காரில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேர் திருச்செந்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர். காரை முருகானந்தம் ஓட்டிச்சென்றார்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ரவுண்டானா அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென  சாலையின் நடுவே உள்ள சிறிய உயர பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த முருகானந்தம், வசந்தா, ஆனந்தி, நான்கு வயது குழந்தை சிவசங்கரி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 மேலும் காயமடைந்த பத்து பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசரசிகிச்சை பகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர் இதில் இருவரது நிலை கலலைக்கிடமாக உள்ளது.   இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.