முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு, பாணதீர்த்த அருவிகளில் 3 ஆவது நாளாக வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து் வருகிறது. பாபநாசம், சேர்வலாறு, பாபநாசம் கீழ் அணை, மணிமுத்தாறு அணைப் பகுதியில் நீடிக்கும் மழையால் நீர்பிடிப்பு பகுதியில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாணதீர்த்த அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து் வருகிறது. பாபநாசம், சேர்வலாறு, பாபநாசம் கீழ் அணை, மணிமுத்தாறு அணைப் பகுதியில் நீடிக்கும் மழையால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

3 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருந்தது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாபநாசம் பாணத்தீர்த்த அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாணதீர்த்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையின் தடை அமலில் உள்ளது. மேலும் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து இல்லாததால் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வாய்ப்பில்லை.

போக்குவரத்து பாதிப்பு: மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லும் மலைப்பாதை சாலை குண்டு குழியுமாக காணப்பட்டதால், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →