தற்போதைய செய்திகள்

அச்சக ஊழியர் கொலை: இளைஞர்கள் 4 பேர் கைது

திண்டுக்கல் ஓய்எம்ஆர் பட்டியைச் சேர்ந்த சொ.நாகசுந்தரம்(30). தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து இவர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல் வடக்கு ரதவீதி பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

ஆ. நங்கையார் மணி

தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு அச்சக ஊழியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் ஓய்எம்ஆர் பட்டியைச் சேர்ந்த சொ.நாகசுந்தரம்(30). தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து இவர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல் வடக்கு ரதவீதி பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு காவல்நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், இவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதனை அடுத்து, முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேரை தேடும் பணியில், போலீஸார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு: ஸ்டீபன் அந்தோணி(30), செபஸ்தீயான்(33), அந்தோனி அசோக்(30), அமல்ராஜ்(30). திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த இவர்கள் 4 பேரும், சுமை தூக்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும், போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT