நெல்லை மாவட்டத்தில் அடை மழை: கடனாநதி அணை நிரம்புகிறது
திருநெல்வேலி மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பலத்த பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 73 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1,118 கனஅடி வரத்து இருந்ததால் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பலத்த பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 73 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1,118 கனஅடி வரத்து இருந்ததால் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
செவ்வாய்க்கி்ழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 74, பாபநாசம் கீழ் அணை 60, சேர்வலாறு அணை 36, மணிமுத்தாறு அணை 39.6, கடனாநதி அணை 85, ராமநதி அணை 95, கருப்பாநதி அணை 48, குண்டாறு அணை 52, அடவிநயினார் அணை 5, நம்பியாறு அணை 6, கொடுமுடியாறு அணை 40.
அதிகபட்ச மழை பதிவு: இம்மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஆலங்குளத்தில் 296.2 மி.மீ மழை பெய்துள்ளது. இதுவரை பெய்த மழையால் ஆலங்குளத்தில்தான் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது.
அம்பாசமுத்திரத்தில் 22.3 மழையும், சேரன்மகாதேவியில் 55.6 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 34 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 50 மி.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 23 மி.மீ மழையும், செங்கோட்டையில் 7 மி.மீ மழையும், தென்காசியில் 69.3 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 100 மி.மீ மழையும், நான்குனேரியில் 27.5 மி.மீ மழையும் பெய்துள்ளது.
கடனாநதி அணை நிரம்புகிறது: 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணைக்கு விநாடிக்கு 1,117.97 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 73 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 80.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.75 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 62.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 6.5 அடி உயர்ந்து 66.50 அடியாகவும் இருந்தது.
இதேபோல் கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 52.50 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 26.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 113.50 அடியாகவும் இருந்தது.
இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் அடை மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனை கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.