பண்ருட்டி அருகே பயிற்சி டிஎஸ்பியுடன் இளைஞர்கள் தகராறு: போலீஸார் தடியடி
பயிற்சி டிஎஸ்பியுடன் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த மறியல் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.
பயிற்சி டிஎஸ்பியுடன் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த மறியல் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.
பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராம பகுதியில் உதவி பயிற்சி டிஎஸ்பி மணிகண்டன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூட்டமாக அங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களைக் கலைந்து போகச் சொல்லி, மணிகண்டன் சொன்னபோது, அவரிடம் வந்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, இளைஞர்களில் ஒருவர் அவரைத் தாக்கவே, அவரை மணிகண்டன் அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்கள், போலீஸ் வாகனத்தையும் பேருந்தையும் மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மக்களுடன் அதிகாரிகள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதில் கொத்தனார் குமார் என்பவர் காயம் அடைந்தார். அவர் பின்னர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, போலீஸார் இது குறித்து விசாரிக்க கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். அவர்களை விடுதலை செய்ய அனைத்துக் கட்சி சார்பில் டிஎஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், இது போல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் உறுதி கூறப்பட்டது. எனவே, வழக்கு எதுவும் இன்றி மக்களை விடுவிக்க அனைத்துக் கட்சியினர் சார்பில் போலீஸாரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.