முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பாற்கடல் குளத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரின் உழவாரப்பணி!

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:

சிதம்பரம் வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரின் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தலைவர் மு.செங்குட்டுவன் தலைமையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்டு குளம் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. குளத்தில் படிக்கட்டுகள் சீரமைக்கப்படும் பணியும், சுற்றுச்சுவர் எழுப்பும் பணியும், குளத்திற்கு நடராஜர் கோயில் தீர்த்தகுளமான சிவகங்கை  குளத்திலிருந்து வரும் நீர்வழி சுரங்கப்பாதையை தூர்வாரி நீர் கொண்டு வரும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மற்றும் சிவபக்தர்கள் திருப்பாற்கடல் குளத்தில் மு.செங்குட்டுவன் தலைமையில் உழவாரப்பணியை மேற்கொண்டனர். குளத்தில் உள்ள மண்ணை அகற்றியும், படிகளை சுத்தம் செய்தும், கரைகளை சீரமைத்து உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.