முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு 2,120 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: அமைச்சர்

வடகிழக்கு பருவ மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,010 ஏக்கரில் நெற்பயிரும், 110 ஏக்கரில் பிற விளைப் பொருட்களும் சேதமடைந்திருப்பதாக மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

வடகிழக்கு பருவ மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,010 ஏக்கரில் நெற்பயிரும், 110 ஏக்கரில் பிற விளைப் பொருட்களும் சேதமடைந்திருப்பதாக மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து புதன்கிழமை சாரல் அரங்கில் பல்வேறுதுறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மு. கருணாகரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,010 ஏக்கரில் நெற்பயிர்களும், 110 ஏக்கரில் மக்காச் சோளம், பருப்பு வகை, கால்நடை தீவனச் சோளம் வகைகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சேதம் குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும் மழைக்கு உயிரிழந்த ஆலங்குளம் வட்டம், துப்பாக்குடியை சேர்ந்த விஜய், செங்கோட்டை வட்டம், கற்குடி கிராமத்தை செல்வன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ. 1.50 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 34 வீடுகள் முழுவதுமாகவும், 93 வீடுகள் பகுதியாகவும் இடிந்துள்ளது. வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3.31 லட்சமும், கால்நடைகளுக்கு ரூ. 80 ஆயிரமும் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை கிராத்தில் உள்ள பெரியகுளம் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

மழையால் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம், வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 37,500 ம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்த 13 பயனாளிகளுக்கு ரூ. 1.03 லட்சம் உள்பட ரூ. 16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் நிவாரண உதவித் தொகையினை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில், எஸ். முத்துக்கருப்பன் எம்.பி, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி. விஷ்ணு, ஆட்சியரின் உதவியாளர் (பொது) ஹாரிஷ், கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், எஸ். துரையப்பா, எஸ். முத்துசெல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →