முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை ககன்தீப்சிங் பேடி ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரியின் ராதாமதகு பகுதிக்கு சென்று ஏரியின் நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ஏரியில் 44 அடி நீர் தேக்கி வைக்க வேண்டும் என்றும், தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல்லும், உரமும் உடனடியாக வழங்க வேண்டும் என என ககன்தீப்சிங்பேடியிடம் விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்தார். உடனடியாக நவ.8-ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ஏரியில் 44 அடி நீர் தேக்கி வைத்தால் போதும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டார்.

பின்னர் அவர் லால்பேட்டை அருகே வெள்ளியங்கால் ஓடையில் வெளியேற்றப்படும் நீரில் அளவு குறித்து ஆய்வு செய்தார். திருநாரையூரில் உள்ள அவசர கால சுனாமி மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டு தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அப்போது அப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழையின் போது திருநாரையூரில் குடியிருப்புகளில் நீர் புகுந்துவிடுவதும், அதனை அதிகாரிகள் வெளியேற்றுவதுமாக உள்ளனர். ஆனால் நிரந்திர தீர்வு காணப்படவில்லை. எனவே திருநாரையூர் கிராமத்திற்கு நீர் புகாமல் தடுக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் என ககன்தீப்சி்ங்பேடியிடம் கோரிக்கை வைத்தனர். வடிகால் வசதி மேற்கொள்வது குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ககன்தீப்சிங்பேடி உறுதியளித்தார்.

பின்னர் ககன்தீப்சிங்பேடியுடன் சிதம்பரம் அருகே குமராட்சி, நந்திமங்கலம், வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, ஜெயங்கொண்டப்பட்டினம், புவனகிரி ஆகிய இடங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், காட்டுமன்னார்கோயில் சட்ட்ப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.