விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பேருந்து பேருந்து ஓட்டுநர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா(49). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, எட்டூர்வட்டம் கிராமம் அருகே வரும் போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் 4 வழிச்சாலை தடுப்பு சுவர் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் முத்தையா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.