தற்போதைய செய்திகள்

புதிய ஆட்களை நியமித்தால் போராட்டம் தீவிரமடையும்: என்எல்சிக்கு ஏஐடியுசி எச்சரிக்கை

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர சுமூகமான பேச்சுவார்தையும் நியாயமான முடிவுகளுமே தீர்வாக முடியும். மின் உற்பத்தி பாதிக்கும் என்ற பெயரில் ஒப்பந்த

பெ. விஜயபாஸ்கர்

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு என்எல்சி நிர்வாகமே காரணம். புதிய ஆட்களை நியமித்தால் போராட்டம் தீவிரமாகும் என ஏஐடியுசி மாவட்டச்செயலர் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர சுமூகமான பேச்சுவார்தையும் நியாயமான முடிவுகளுமே தீர்வாக முடியும். மின் உற்பத்தி பாதிக்கும் என்ற பெயரில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய ஆட்களை நியமிப்பது தேவையற்றது.

நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை சட்டவிரோதமானது. பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸார், பணிக்குச் செல்லும் தொழிலாளர்களை தீவிர பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். சந்தேகிக்கும்படி யாராவது பிடிபட்டால் அவரையும், அவரை பணிக்கு அனுப்பிய ஒப்பந்ததாரரையும் கைது செய்ய வேண்டும்.

இதனால் தொழிற்சாலை பாதுகாப்பும், தொழில் அமைதியும் பாதுகாக்க முடியும். இதனை மீறி என்எல்சி நிர்வாகம் செயல்பட்டால் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடையும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT