தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்துச் சம்பவம்: ஒருவர் கைது

விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில், திருத்தங்கல்லைச் சேர்ந்த சகோதரர்கள்  முத்துராமிலிங்கம்-ராமர் ஆகியோர் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். இந்த  ஆலையில் உள்ள 12 அறைகளில் போதுமான பாதுகாப்பு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்துச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை ஒருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில், திருத்தங்கல்லைச் சேர்ந்த சகோதரர்கள்  முத்துராமிலிங்கம்-ராமர் ஆகியோர் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். இந்த  ஆலையில் உள்ள 12 அறைகளில் போதுமான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்ததால் கடந்த மாதம் 6-ம் தேதி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து உற்பத்திக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையும் மீறி ஆலை அருகே கூடாரம் அமைத்து புதன்கிழமை 12 பேர் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மருந்து உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்த அருள்ராஜ்(45), மாரியப்பன்(29) ஆகிய 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் சகோதர்களான முத்துராமலிங்கம், ராமர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ராமர் மகன் கருப்பசாமி(23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கனவே புதன்கிழமை ஆலையின் ஒப்பந்தாரர் அழகர்சாமியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT