முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே மர்ம பார்சலில் ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள்

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பிரதான நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சாலையோரமாக பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று கிடந்தது. தகவலறிந்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை நான்கு வழிச்சாலை பகுதியில் கிடந்த மர்ம பார்சலில் கல் குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பிரதான நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சாலையோரமாக பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று கிடந்தது. தகவலறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர் தலைமையில் வெடிகுண்டு பிரிவு ஆய்வாளர் குணசேகரன், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜூ மற்றும் போலீஸார் விரைந்து சென்று அந்த மர்ம பார்சலை பிரித்து பார்வையிட்டனர்.

இந்த பார்சலில் கல் குவாரியில் பாறையினை உடைக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின்,டெட்டனேட்டர் குச்சிகளும் இருந்தது. அதிலிருந்த 13 ஜெலட்டின் குச்சி மற்றும் 12 டெட்டனேட்டர் குச்சிகளை போலீஸார் கைப்பற்றி நீதிமன்ற அனுமதியுடன் அழிக்க நடவடிக்கை எடு்த்தனர்.

ஜெலட்டின் குச்சிகள் கல் குவாரியில் பாறையினை உடைக்கப் பயன்படுத்த கொண்டு செல்ல எடுத்து செல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி செயல்களில் ஈடுபடுவதற்காக எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →