தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: மு.க.அழகிரி மீதான விசாரணை அக்.27-க்கு ஒத்திவைப்பு
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மேலூர் தேர்தல் அலுவலர் மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரியால் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மேலூர் தேர்தல் அலுவலர் மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரியால் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை அக்.27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலின்போது மு.க.அழகிரி முக்கிய்ப பிரமுகர்களை அம்பலகாரன்பட்டியிலுள்ள வல்லடையார் சுவாமி கோவில் வலாகத்தில் சந்தித்தார். இந்நிகழ்வை தேர்தல் அலுவலரும் மேலூர் வட்டாட்சியருமான காளிமுத்து விடியோ கிராபர் கண்ணனை வைத்து படம்பிடித்தார்.
இதை ஆட்சேபித்த திமுகவினருக்கும் வட்டாட்சியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டதாக கீழையூர் போலீஸில் காளிமுத்து புகார் செய்தார். இதில் மு.க.அழகிரி, மேலூர் ஒன்றியச் செயலர் ரகுபதி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 21 பேர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மேஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக தரப்பில் வழக்குரைஞர்கள் எஸ்.மோகன்குமார், வெ,எழிலரசு தலைமையில் பலர் ஆஜரானார்கள். குற்றம்ச்சாட்டப்பவர்கள் தர்பபில் ரகுபதி, வெள்ளையன் உள்ளிட்ட 11 பேர் ஆஜரானார்கள்.
விசாரணையை அக்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்த மேஜிஸ்திரேட், மு.க.அழகிரியிடம் விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டார்.