கைவிரல் காயத்துக்கு சிகிச்சைக்கு வந்தவரை கோமாவில் தள்ளிய மருத்துவமனை : உறவினர்கள் முற்றுகை
கைவிரல் காயத்துக்கு சிகிச்சைக்கு வந்தவரை கோமாவில் தள்ளிய தனியார் மருத்துவமனை முன்பு பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கைவிரல் காயத்துக்கு சிகிச்சைக்கு வந்தவரை கோமாவில் தள்ளிய தனியார் மருத்துவமனை முன்பு பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டி வட்டம் வீரபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் களியன் (47), இவர் பண்ருட்டி இடமங்கலம் பகுதியில் தங்கி பேக்கரி கடைகளுக்கு உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
ஆகஸ்ட் 6ம் தேதி இயந்திரத்துக்குள் மாவு போடும் போது களியனின் மோதிர விரல் நுனி இயந்திரத்தில் சிக்கி நசுங்கியது. அதற்கு சிகிச்சைசக்காக பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஊசி போட்டதில், களியன் நினைவிழந்து விட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
15 நாட்கள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் களியப் பெருமாள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை அவருக்கு நினைவு திரும்பவில்லை. மகாத்மா காந்தி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் தவறுதலான ஊசி போட்டதால்தான் நினைவிழந்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.
இதானால் பாதிக்கப்பட்ட களியனின் மனைவி லட்சுமி, மகள்கள், மகேஷ்வரி, கலைவாணி, புத்திசுவாதீனம் இல்லாத மகன் வீரன் மற்றும் உறவினர்கள் உட்பட சுமார் 40 பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.
பண்ருட்டி காவல்துறை ஆய்வாளர் சிவ சுப்பு, சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.