தற்போதைய செய்திகள்

தொடர் முழக்க போராட்டம் நடத்த முயற்சி: எனஎல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் கைது

தொடர் முழக்க போராட்டம் நடத்த முயன்ற என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பெ. விஜயபாஸ்கர்

தொடர் முழக்க போராட்டம் நடத்த முயன்ற என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 நெய்வேலியில் 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை போலீஸ் தடை உத்தரவை மீறி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 என்எல்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வெள்ளிக்கிழமை 17வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது.

  ஏற்கனவே அறிவித்தபடி தொடர் முழக்க போராட்டத்தை தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஸ்கியூ பாலத்தில் தமிழக வாழ்வுரிமை சங்கத்தின் சிறப்பு தலைவர் அன்பழகன் தலைமையில் ஆலோசகர் தேவராஜன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை துவங்கினர்.

 தொமுச நிர்வாகி பழனிவேல், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குப்புசாமி, முருகவேல், தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் செüந்திரராஜன், ஐஎன்டியுசி நிர்வாகிகள் சுகுமார், ஜானகிராமன், ராஜேந்திரன், சிஐடியு நிர்வாகி சீனுவாசன், தவாக நிர்வாகி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 தொடர் முழக்க போராட்டத்துக்காக பந்தல் அமைக்க முயன்ற தொழிற்சங்க கூட்டமைப்பினரை போலீஸôர் தடுத்து நிறுத்தி, நீதிமன்ற தடை மற்றும் காவல்துறை தடையை காரணம் காட்டி டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, குமார் ஆகியோர் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட போலீஸôர் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து போராட்டம் நடத்திய 300 பேரை போலீஸôர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

நாளை தவாக போராட்டம்:

 வரும் 21ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கண்டன பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சதுக்கத்தில் இருந்து பேரணியாக சென்று மத்திய பஸ்நிலையம் எதிரே பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவாக தலைவர் வேல்முருகன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT