மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் சாவு
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சோ. ராமன் (65). இவரது மகன் துரைராஜ் (40). இருவரும், தங்களது கால்நடைகளை அதே கிராமத்தில் உள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக சனிக்கிழமை
பெரம்பலூர் அருகே, சனிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சோ. ராமன் (65). இவரது மகன் துரைராஜ் (40). இருவரும், தங்களது கால்நடைகளை அதே கிராமத்தில் உள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக சனிக்கிழமை காலை ஓட்டிச்சென்றனர். மாடுகளை மேய்த்துவிட்டு வயல் பகுதியில் உள்ள கொட்டகைக்கு அருகில் உள்ள மின்சார கம்பியில் கன்றுக்குட்டியை கட்டி வைத்திருந்தனராம். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் லேசான மழை பெய்ததாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து, மின்சார கம்பியில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி மீது மின்சாரம் பாய்ந்ததில் கன்றுக்குட்டி அலறியதையடுத்து ராமனும், துரைராஜூம் கன்றுக்குட்டியை மீட்க சென்றபோது, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் ராமன், துரைராஜ் மற்றும் கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.