முகப்பு
தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி அருகே வீடுபுகுந்து  15 பவுன் நகை கொள்ளை

ரெத்தினகோட்டை கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பையா(39) இவர் சொந்தமாக பிராய்லர்கோழிகளை வளர்த்து வருகிறார்.  இவரது மனைவி சுதா(20) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டை கிராமத்தில் வீட்டின் உரிமையாளரை தாக்கி 15 பவுன் நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலிசார் தேடிவருகிறார்கள்.

ரெத்தினகோட்டை கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பையா(39) இவர் சொந்தமாக பிராய்லர்கோழிகளை வளர்த்து வருகிறார்.  இவரது மனைவி சுதா(20) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு  வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதிகாலை 3 மணி அளவில் கைலி அணிந்த 3 இளைஞர்கள் பின்புறக் கதவை திறந்து கொண்டு வந்து உள்ளே வேறு அறையில் இருந்த  பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி உள்ளனர்.

மேலும் அங்கிருந்த 2 பெட்டிகளை வெளியே கொண்டு வந்து உடைத்து பார்த்துள்ளனர் அதில் எதுவும் இல்லாத காரனணத்தால் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுதாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அறுக்க முயன்றுள்ளனர் அப்பொழுது எழுந்த சுப்பையாவை கையில் வைத்திருந்த கட்டையால் தலையிலும் கையிலுóம் தாக்கிவிட்டு 3 நபர்களும் தப்பிவிட்டனர்.

சுப்பையா 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்றுவருகிறார், அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.