ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மீது மணல் டிராக்டரில் மோத முயற்சி
ஆவுடையார்கோவில் தாலுகா வெண்ணாற்றில் அரசு அனுமதியின்றி பல நாட்களாக மணல் கடத்திவருவது நடந்து வருகிறது இது குறித்த புகாரின்பேரில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஏம்பல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையாóர்கோவில் வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறையினர் மீது மணல் டிராக்டருடன் மோத வந்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவுடையார்கோவில் தாலுகா வெண்ணாற்றில் அரசு அனுமதியின்றி பல நாட்களாக மணல் கடத்திவருவது நடந்து வருகிறது இது குறித்த புகாரின்பேரில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஏம்பல் வருவாய் ஆய்வாளர் பழனிச்சாமி, கிராமநிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலக உதவியாளர் அருண் உள்ளிட்டோர் சிறுகாசாவயல் கிராமத்திற்கு சனிக்கிழமை இரவு ஆய்வுக்கு சென்றுளளனர்.
அப்பொழுது 2 டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளியநிலையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை மறித்த போது 1 வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிச்சென்றுவிட்டார். மற்றொரு டிராக்டர் அலுவலர்கள் மீது மோதுவது போல் வநது வட்டாட்சியர் வாகனத்தை மீது சிறிய அளவில் மோதிநிற்காமல் சென்றுவிட்டது.என்று கூறப்படுகிறது.
வட்டாட்சியர் ரவிச்சந்திரன் 1 டிராக்டரை மீட்டு ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு தன்மீது மோதவந்ததாக காசாவயலை சேர்ந்த சுந்தரம் மகன் இளையராஜ் என்ற டிராக்டர் ஓட்டுநர் மீது நாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் போலிசார் இளையராஜாவை தேடி வருகின்றனர்.