முகப்பு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி காட்டி நகை பறித்த வழக்கு: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி நகைகைய பறித்துச் சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

துப்பாக்கி காட்டி நகை பறித்த வழக்கு: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி நகைகைய பறித்துச் சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி நகைகைய பறித்துச் சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த கோ.காளியப்பன் (44) என்பவர் சனிக்கிழமை மம்சாபுரம் சாலையில் உள்ள பொன்னாங்கன்னி இறக்கத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்றுவிட்டாராம். செயின் எடை ஒன்னறை பவுன்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரைக் கைது செய்து செய்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.
மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவாக இருந்த தற்போது மடவார்வளாகத்தில் குடியிருக்கும் பா.முருகசேன் (25) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →