முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி ஜங்ஷன் அருகே காவலாளி  கொலை

திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் கட்டடம் கட்டும் பணி ஒன்று நடந்து வருகிறது. அங்கே பொருள்களுக்கான காவலாளியாக பாலசுப்பிரமணியன் (55) என்பவர் பணியில் இருந்து வந்தார். நேற்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:52 AM
பகிர்:

திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் கட்டடம் கட்டும் பணி ஒன்று நடந்து வருகிறது. அங்கே பொருள்களுக்கான காவலாளியாக பாலசுப்பிரமணியன் (55) என்பவர் பணியில் இருந்து வந்தார். நேற்று பணிக்கு வந்தவர், இன்று காலை 5 மணி அளவில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவர், அந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பதால், அது காரணமாக யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் இந்தக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.