தந்தை கொலை: தலைமறைவாக இறந்த வாலிபர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருந்த
தற்போதைய செய்திகள்தந்தை கொலை: தலைமறைவாக இறந்த வாலிபர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருந்த
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). கட்டடத் தொழிலாளி இவரது மகன் பாண்டியன் (38). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்கள் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வந்த சுப்பையாத்தேவர் கால் வலி காரணமாக கால்களில் எண்ணெய் தடவிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, வீட்டில் பாண்டியனின் மனைவி முனீஸ்வரி தரையில் படுத்திருந்துள்ளார். அப்போது, முனீஸ்வரியை அவர் தவறான நோக்கத்தில் பார்த்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பாண்டியன், என் மனைவியை ஏன் தவறாக பார்க்கிறீர்கள் என்று கூறி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், சுப்பையாத்தேவர் தனது துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டின் அருகே குடியிருந்துவரும் மகள் காளீஸ்வரி வீட்டுக்குச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் அரிவாளுடன் காளீஸ்வரி வீட்டிற்கு வந்த பாண்டியன், தந்தை சுப்பையாத்தேவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து மல்லி காவல் நிலையத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாண்டியனைத் தேடி வந்தனர். இந்நிலையில், டி.மானகசேரி விலக்கு, கருப்புசாமி கோயில் அருகே மதுவில் விஷம் குடித்து பாண்டியன் தற்கொலை செய்துகொண்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த மல்லி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து மல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.