முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அரசு பேருந்தில் தீ

காரியாபட்டியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துச் சொந்தமான டிஎன் 67 என்- 0280 என்ற அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காரியாபட்டியிருந்து புறப்பட்டு நரிக்குடி சென்றது.

தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அரசு பேருந்தில் தீ

காரியாபட்டியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துச் சொந்தமான டிஎன் 67 என்- 0280 என்ற அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காரியாபட்டியிருந்து புறப்பட்டு நரிக்குடி சென்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

காரியாபட்டியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துச் சொந்தமான டிஎன் 67 என்- 0280 என்ற அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காரியாபட்டியிருந்து புறப்பட்டு நரிக்குடி சென்றது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் காரியாபட்டி பேருந்து நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு வந்து நின்றது. அதைத்தொடர்ந்து மதியம் 1.05 மணிக்கு இப்பேருந்து கம்பிக்குடிக்கு புறப்பட இருந்தது.

பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியனும், நடத்துநர் முருகனும் பேருந்தை நிறுத்திவிட்டு சுமார் 7 மீட்டர் தூரத்திலிருந்த அரசு போக்குவரத்துக்கழக பூத் அலுவலகத்தில் கையெழுத்திடச் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் பேருந்தின் பின்பக்கத்திலிருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பேருந்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அப்போது, பேருந்தின் என்ஜின் திடீரென இயங்கியதால் தீப்பிடித்து எரிந்தபடியே பேருந்து முன்பக்கமாக சில அடி தூரம் நகர்ந்துசென்று எதிரேயிருந்த செல்போன் கடையின் தடுப்புச் சுவற்றில் மோதி நின்றது. இதைக் கண்டதும் பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளும், கடைகளிலிருந்த வியாபாரிகளும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பேருந்து நிலையத்தில் கடை நடத்திவரும் சிலர் குடங்களில் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றி தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியிருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, காரியாபட்டி உள்பட விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. காரியாபட்டி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும், நிறுத்தப்பட்ட அரசு பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததாலும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

தகவலறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், எஸ்.பி.மகேஸ்வரன் மற்றும் காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பேருந்து நிறுத்தப்பட்டதும் பின்பக்கமாக வந்த 3 மர்ம நபர்கள் பேருந்துக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, எஸ்.பி.மகேஸ்வரனிடம் கேட்டபோது, முதல்வர்  ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீப்பற்றி எரிந்த பேருந்திலிருந்து சில தடையங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைக்குப் பின்னர் பேருந்துக்கு யார் தீ வைத்தது என்பது தெரியவரும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →