முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறையில் ஜெயலலிதா : பண்ருட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து பண்ருட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து பண்ருட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட கவுன்சிலர் தேவநாதன் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணன், மாவட்ட சத்துணவு கூட்டுறவு சங்கத்தலைவர் வைத்தியநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா வடிவேல், ராஜேந்திரன், குருநாதன், அண்ணா போக்குவரத்து மாவட்டச் இணைச் செயலர் சக்திவேல், அண்ணா பேரவைச் செயலர் விஸ்வநாதன், முன்னாள் மாணவர் அணி செயலர் ஜோதி ராமலிங்கம், அக்ரோ தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து காடாம்புலியூர் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல, குறிஞ்சிப் பாடி ஒன்றியம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்திரா நகரில் நெய்வேலி வளைவுக்கு எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →