நெல்லை, அம்பை, சங்கரன்கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவிலில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவிலில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு ஆகியன நடைபெற்றன.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.கே. ஹைதர்அலி, கி. மாதவராமானுஜம், ந. மோகன், எம்.சி. ராஜன், மாநகர் மாவட்டப் பொருளாளர் தச்சை கணேசராஜா,
மானூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதாபரமசிவன், சிறுபான்மை பிரிவு செயலர் மகபூப்ஜான், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன் உள்பட 2,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் திரையரங்கு அருகில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டச் செயலரும், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன் தலைமை வகித்தார். மாநில கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம். சக்திவேல்முருகன், மாவட்ட துணைச் செயலர் செவல் எஸ். முத்துசாமி, இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலர் ஆர்.எம். வெங்கட்ராமன், நகர்மன்றத் தலைவர்கள் வே. செல்வி, இ. மனோன்மணி, கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்பட 2,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மழையில் உண்ணாவிரதம்: சங்கரன்கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். காலை 10.30 மணியளவில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.