ரிஷிவந்தியத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பகண்டை கூட்டுச்சாலையில்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பகண்டை கூட்டுச்சாலையில் ஒன்றியச் செயலர் கதிர்.தண்டபாணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சிவராஜ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.