அர்ஜுன் இயக்கி நடித்த சீதா பயணம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சீதா பயணம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அர்ஜுன் ’சீதா பயணம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநரானார்.
நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து சீதா பயணம் படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிரி என்கிற பாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள சீதா பயணம் திரைப்படம், காதலர் நாளை முன்னிட்டு கடந்த பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், சீதா பயணம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது.
The OTT release date of Arjun's film Seetha Payanam has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.