ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை கிழித்ததாக போலீஸில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
எஸ்.கொடிக்குளம் பேரூட்சியின் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் காலை 11.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு துணைத் தலைவர் முத்துலட்சுமி அவரது கணவர் அ.பாண்டி மற்றும் மகன் வந்துள்ளார்கள்.அ.தி.மு.க பொதுச் செயலாளர் கைது சம்பத்தையடுத்து அசாதாரண நிலை நிலவுகையில் ஏன் பேரூராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். நாங்கள் செவ்வாய்கிழமை விருதுநகரில் இதனைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்கிறோம் என்று செயல் அலுவலர் ம.சேகரிடம் சொல்லியுள்ளார்கள். அவர் அதற்கு கூட்டம் அப்படிதான் நடக்கும். தலைவரைப் போய் கேளுங்கள் என்று சொல்லி முறையில்லாமல் பேசியதாகக் கூறப்படுகிறது. தலைவர் சுப்புலட்சுமி கைப்பமிட்டுவிட்டு உண்ணாவிரத்திற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செயல் அலுவலர் ம.சேகர் (34), கூமாப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் துணைத் தலைவர் முத்துலட்சுமி, அவரது கணவர் பாண்டி மற்றும் அவர்களின் மகன் சேர்ந்து தன்னை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கி, சட்டையைக் கிழித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கூமாப்பட்டி போலீஸார் துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்துத வருகிறார்கள்.