தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கொட்டும் மழையிலும் அதிமுகவினர் கறுப்பு ஆடை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், விடுவிக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட

எஸ். பாண்டியன்

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், விடுவிக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் சார்பில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்போராட்டத்தினால் நகருக்குள்  அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான ஐ.மருது தலைமை வகித்தார். விருதுநகர் ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, நகராட்சி தலைவர் மா.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இப்போராட்டத்தி்ல் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாநில மகளிர் அணிச் செயலாளர் சக்திகோதண்டம், மாநில அண்ணா தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட இளம் பாசறை செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் நா.கௌரி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உண்ணாவிரதம் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்கள்.

இப்போராட்டத்தில் அனைத்து நகராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுகவினர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் முகமது நயினார், நகராட்சி துணைத் தலைவர் எஸ்.மாரியப்பன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் மூக்கையா உள்ளிட்ட கட்சியினர் செய்திருந்தனர்.

மழை: உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக பரவலான மழை பெய்தது. அப்போதுதான் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் வாகனங்களில் வந்தது மழைக்காக ஓரப்பகுதிகளில் ஒதுங்கி நின்றிருந்தனர். அதையடுத்து, 10 மணிக்கு மேல் அதிகளவில் கூட்டம் சேரத் தொடங்கியது. அதற்கடுத்து இடையிடையே மழை பெய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.  இதனால் நகருக்குள் நெருக்கடி ஏற்படும் என்பதை கருத்திற் கொண்டு மாவட்ட காவல் துறை போக்குவரத்தில் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். நகர் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் அத்தியவாசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT