முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் ரூ.14 லட்சம் செலவில் இரு புதிய பேருந்துகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நலன் கருதி ரூ.14 லட்சம் செலவில் இரு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நலன் கருதி ரூ.14 லட்சம் செலவில் இரு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை மாணவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், மாணவிவயர்கள் விடுதியிலிருந்து வகுப்புகளுக்கு செல்லவும், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதற்கும் வசதியாக பல்கலைக்கழக நிர்வாகம் தமிழகஅரசு விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்திடமிருந்து ரூ.14 லட்சம் செலவில் இரு பேருந்துகளை வாங்கியுள்ளது. இந்த இரு பேருந்துகளின் சேவையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.மேலும் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் செலவில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டு, இதன் சேவையினையும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.வசந்தகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.ரமேஷ் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்த, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மேற்கொள்ள ரூ 1.35 கோடி செலவிலான சி.டி.ஸ்கேன் வாங்கி பொருத்தப்பட்டுள்லது. ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன அவசர சிகிச்சை வாகனமும் (Hospital on Wheels)வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப ரூ.30 லட்சம் மதிப்பிலான 4 டயாலசிஸ் யூனிட்கள் மற்றும் ரூ.28 லட்சம் செலவில் நான்கு வென்டிலேட்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.21 லட்சம் மதிப்பில் 3 புதிய வென்டிலேட்டர் கருவிகள் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் சுவாசக் கோளாறு, பிறப்பிலேயே ஏற்படும் இதய கோளாறுகள், பாம்பு, தேள்கடி விஷம் நீக்குதல், இதர பூச்சிக்கொல்லிகள் மூலம் ஏற்படும் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.